மேலமருத்துவக்குடி

திங்கள், 6 செப்டம்பர், 2010

ராஜராஜசோழன்னின் சமாதி உடையாளூர்






ராஜராஜசோழன் னின் சமாதி 
உடையாளூர் 
http://semmozitamil.wordpress.com/2010/07/05/raja-raja-cholan/

தமிழ் ஆண்டு படிகள்! சுவாமி மலை

தமிழ் ஆண்டு படிகள்!

சுவாமி மலை
அறுபடை வீடுகளில் நான்காவதாகக் குறிப்பிடப்படும் திரு ஏரகம் என்பது சுவாமி மலை. இக்கோயிலுக்கு அறுபது படிகள் ஏறிச் சென்று மூலஸ்தானத்தை அடைய வேண்டும். இப்படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்




ஜோதிர் லிங்கங்கள்
1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்-623 526
குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.
2. அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம்-518 101, கர்நூல் மாவட்டம். ஆந்திரா - கர்நூல் மாவட்டம் நந்தியாவிலிருந்து 70 கி.மீ.
குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.
3. அருள்மிகு பீமசங்கரர் திருக்கோயில், பீமசங்கரம், மஹாராஷ்டிரம் புனாவிலிருந்து 140 கி.மீ.
குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.
4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்-422 212, மஹாராஷ்டிரம். நாசிக்கிலிருந்து 29 கி.மீ.
குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.
5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர் திருக்கோயில், குஸ்ருணேஸ்வரம்(வேரூன்)-431 102, மஹாராஷ்டிரம்-எல்லோரா குருகே.
குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.
6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத்
குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி.
7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா-396 526, குஜராத்
குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.
8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், ஓங்காரம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினிலிருந்து 281 கி.மீ.
குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.
9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், உஜ்ஜயினி (அவந்தி)-456 001, மத்திய பிரதேசம்
குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.
10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், சித்த பூமி (தேங்கர்) பீகார்
குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.
11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்
குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.
12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்
குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை.


வாஸ்து நாட்கள்//சுப முகூர்த்த நாட்கள்

வாஸ்து நாட்கள்
வாஸ்து நாள் நேரம்
சித்திரை 10 காலை 08.54 முதல் காலை 09.30 வரை
தை 12 காலை 10.41 முதல் காலை 11.17 வரை
மாசி 22 காலை 10.32 முதல் காலை 11.08 வரை
வைகாசி 21 காலை 09.58 முதல் காலை 10.34 வரை
ஆடி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
ஆவணி 6 காலை 07.23 முதல் காலை 07.59 வரை
ஐப்பசி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
கார்த்திகை 8 காலை 11.29 முதல் காலை 12.05 வரை
சுப முகூர்த்த நாட்கள்
        சுப முகூர்த்த நாள்   நேரம்  
10-செப்டம்பர்-2010 * காலை 09.30 முதல் காலை 10.30 வரை
12-செப்டம்பர்-2010 * காலை 07.30 முதல் காலை 08.30 வரை
27-அக்டோபர்-2010 காலை 09.30 முதல் காலை 10.30 வரை
29-அக்டோபர்-2010 காலை 09.30 முதல் காலை 10.30 வரை
3-நவம்பர்-2010 காலை 09.30 முதல் காலை 10.30 வரை
4-நவம்பர்-2010 காலை 10.30 முதல் காலை 11.30 வரை
8-நவம்பர்-2010 * காலை 06.30 முதல் காலை 07.30 வரை
12-நவம்பர்-2010 * காலை 09.30 முதல் காலை 10.30 வரை
18-நவம்பர்-2010 * காலை 10.30 முதல் காலை 11.30 வரை
25-நவம்பர்-2010 காலை 10.30 முதல் காலை 11.30 வரை
2-டிசம்பர்-2010 காலை 10.30 முதல் காலை 11.30 வரை
9-டிசம்பர்-2010 * காலை 09.30 முதல் காலை 10.30 வரை
12-டிசம்பர்-2010 * காலை 09.30 முதல் காலை 10.30 வரை
























































திருக்கருக்காவூர் -

திருக்கருக்காவூர் -மாதவி வனேச்சுரர்http://balukathaiyan.blogspot.com/



தலவிருட்சம்:முல்லை
தலமும்இருப்பிடமும்:
கும்பகோணம் தஞ்சை பேருந்துவழியில் சுந்தரப் பெருமாள் கோவிலுக்குத் தென்திசையில் 3 கி.மீ தொலைவிலுள்ளது. அருகில் பாபநாசம் உள்ளது. அப்பர் சுவாமிகளின் தேவாரம் பெற்ற தலம். தாருகாவன் முனிவர்கள் ஏவிய புலியை உரித்து இறைவன் தரிசித்து அருளிய தலம்.

தலப்பெயர்கள்:
இவ்வூர், நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் என்றெழுதப்பட்டுள்ளது. சுவாமி திருப்பாலத்துறை மகாதேவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூர்த்திகள்:
இறைவன் : மாதவி வனேச்சுரர், முல்லை வனநாதர்,கர்ப்ப புரீச்சரர், கருகாவூர்க் கற்பகம் (இது பஞ்சாரண்ய ஷேத்திரத்தில் முதல் ஷேத்திரம்,உஷாக்காலம்)
இறைவி : ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை, கர்ப்ப ரட்ச்கி, கருகாத்த நாயகி, கரும்பனையாள்

தீர்த்தங்கள் :ஷீரகுண்டம்(பாற்குளம்), சத்திய கூபம், பிரம்ம தீர்த்தம், விருத்த காவிரி.
திருமுறை: ஸ்ரீ சம்பந்தர்,ஸ்ரீ அப்பர்
தலப்பெருமை:
இங்குள்ள இறைவி ஊர்த்துவ பாதர் என்ற முனிவர் விட்ட சாபத்தை தணித்து நித்ருவரின் மனைவி வேதிகையின் கலைந்த கருவை திரும்ப உருவாக்கி நைதுருவன் என்ற குழந்தையை கொடுத்தால் கர்ப்ப ராட்சாம்பிகையாகவே எழுந்தருளி,உலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க, அம்பாள் காமதேனுவை அனுப்பி பால்கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்கினால் கீறவும் பால்குளம் தோன்றியது.அது ஆலயத்திற்கு முன்புறம் ஷீரகுண்டம் என்று இருந்து வருகிறது.எனவேதான் இத்தலத்து நாயகியை நினைத்து வணங்கினால் கரு உண்டாகிறது.கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஏற்படுகிறது.
இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு முல்லைவன நாதர் சுயம்பு லிங்கமாகும். லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும் எனவே சுவாமிக்குப் புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.தீராத நோயுடையவர்கள் சுவாமிக்கு புனுகுச்சட்டம் சாற்றி தம் நோய் நீங்கப் பெற்று வருகின்றார்கள்.இது இன்றளவும் நீங்கப் பெற்று கண்கூடான உண்மையாகும்.
தேவார பாடல்:
ஆருர் அத்தா ஜயாற்று
அமுதே.அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ்
புறவிற் கருகாவூ ரானே
பேரூர் உறையாய்ப் பட்டிப்
பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப்
படுவாய் பாசூர் அம்மானே
-சுந்தரர்
மனவஞ்சர் மற்றோட முன்மாதராரும்
மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்
இனவஞ் சொலி இடைமா-மருதும்
இரும்பைப் பதிமாகாள வெற்றிய்யூரு
கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
கருகாவூர் நல்லூர் பெரும் புலியூர்
தனமென் சொல்லிற்றஞ்ச மென்றே நினைமின்
தவமாம் மலமாயின் தான்றுமே
-திருஞானசம்பந்தர்
தலச்சிறப்பு:
பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தைபாக்கியம் பெறவும். திருமணம் கூடிவராத பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரவும் அன்னை கருகாத்த நாயகியை வேண்டி நெய்யினால் படி மெழுகி அம்மன் பாதத்தில் வைத்து மந்திரிக்கப்பட்ட நெய்யினை 48 நாட்கள் உண்டுவந்தால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது கண்கூடு. மேலும் கருவுற்ற பெண்கள் இத்தல்த்து இறைவன் கருகாத்த நாயகியை வேண்டி விளக்கெண்ணெய் மந்திரித்து வயிற்றில் தடவினால் கரு காக்கப்படுகிறது. சுகப்பிரசவம் ஆவதும் உண்மை நிகழ்வுகள்.
முல்லைவனத்தில் புற்றுருவில் சுயம்புவாக தோன்றியதால் லிங்க திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்த வடுவை. இன்றும் காணலாம்.புற்றுருவாக இருப்பதால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை.புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. எனவே இறைவனுக்கு வள்ர்பிறை பிரதோச நாளில் புனுகு இறைவனுக்கு வளர்பிறை பிரதோச நாளில் புனுகு சாத்தி வணங்கினால் தீராத நோய்களனைத்தும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை. கோயில் அலுவலகத்தில் உள்ள புணுகு மட்டுமே இறைவனுக்கு சாத்த அனுமதிக்கப்படும் வெளியிலிருந்து வருவது அனுமதிக்கப்படுவதில்லை.

குத்தாலம்-உக்தவேதீசுவரர்

குத்தாலம்-உக்தவேதீசுவரர்



தலவிருட்சம்:உத்தாலமரம்
 
தலமும் இருப்பிடமும் :
கும்பகோணத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

தலப்பெயர்கள் :
உத்தாலவனம், திருத்துருத்தி


மூர்த்திகள்:
இறைவன் : உக்தவேதீசுவரர்
இறைவி : அரும்பன்னவனமுலையாள்

தீர்த்தங்கள் :பதும, சுந்தர, காவிரி
தலப்பெருமை:
உமையம்மையார் சிவபெருமானை வழிபட்டுத் திருமணம் செய்து கொண்ட தலம் அக்கினி தன்பழி தீர வழிபட்டதலம் .விக்கிரமசோழன் மனைவி கோமளைக்கு குட்டநோய் தீர்த்த தலம்.வருணனின் சலோதரம் நீங்கிய தலம் காளி,சூரியன்,காமன்,காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்ட தல சிவபக்தனின் காசநோய்ப் போக்கியதுமாகிய பல பெருமைகளை உடையது இத்தலம்.
கதிரவன் வழிபட்டு அருள்பெற்ற கார்த்திகை ஞாயிறு வழிபடுவோர் இன்றும் பல்வகை நன்மைகளையும் பெற்று வருகின்ற தலம்.
தேவார பாடல்:
பொருத்திய குரம்பைதன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சுறைவனை யேத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம்வைத்துங் கொருத்தியைச் சையுள்வைத்த
துருத்தியஞ் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே
தலச்சிறப்பு:
தேவாரப் பதிப்பகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 37 வது, திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்புகழ் பெற்ற தலம். மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டோர் நம்பிகள், சேக்கிழார் ஆகியோர் இத்தலத்தை குறித்துப் பாடியுள்ளார்.
http://balukathaiyan.blogspot.com/

திருவாவடுதுறை-கோமுக்தீஸ்வரர்

http://balukathaiyan.blogspot.com/திருவாவடுதுறை-கோமுக்தீஸ்வரர்



தலவிருட்சம்:அரசமரம்
தலமும் இருப்பிடமும்:
கும்பகோணத்திலிருந்து 20 கிலோ மீட்டரில் தொலைவில் உள்ளது.


தலப்பெயர்கள்:
கோகழி, துறைசை, நந்தி சேத்திரம், அரசவனம். மகாதாண்டவபுரம், கோமுக்கிதலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், நவகோடி சித்தபுரம்
மூர்த்திகள்:
இறைவன்:கோமுக்தீஸ்வரர்
இறைவி:ஒப்பிலாமுலையம்மை

தீர்த்தங்கள் :கோமுக்கி தீர்த்தம்
தலப்பெருமை:
பசுவடியாக இருந்த உமாதேவியார் இத்தல இறைவனை வழிபட்டுப் பசுரூபம் நீங்க இறைவனை உமையை அணைத்தெழுந்து காட்சியளித்த தலம்.
தேவர்களும் முனிவர்களும் வேண்டியதற்கிணங்க இறைவன் இத்தல அம்பலத்தில் தாண்டவம் புரிந்த தலம்.
புத்திரபாக்கியமளித்து முசுகுந்த சக்கரவர்த்திக்குத் தியாகேசராகக் காட்சி கொடுத்தும். சுந்தர நடனம் நிகழ்த்தியும் அருள் செய்த தலம்.
முனிவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தருளியதும், போகர் முதலிய நவகோடி சித்தர்களும் அட்டமா சித்திகளை அருளிய தலம்.
தேவார பாடல்:
இடரினுந் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழு வேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
தலச்சிறப்பு:
திருமூலர் இத்தலத்தில் ஆண்டுகளுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகள் யோகம் இருந்து 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திர நூலை அருளிச் செய்த தலம்.
தேவாரப் பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 36 வது திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பதிகம் பெற்றது. திருவிசைப்பா, திருவாசகம், திருமந்திரம் பெரியபுராணம் முதலிய நூல்கள் இத்தலத்தைப் பற்றி சிறப்பிக்கின்றன. தலபுராணம் ஸ்ரீ சாஸ்திரம் சாமிநாத முனிவர் அருளிய துறைசைப் புராணம் உள்ளது.
சோழர், பாண்டியர் கால கல்வெட்டுக்கள் உள்ளன.6 கால பூஜை பெறுகிறது.