குத்தாலம்-உக்தவேதீசுவரர்
![]() தலவிருட்சம்:உத்தாலமரம் | தலமும் இருப்பிடமும் : கும்பகோணத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தலப்பெயர்கள் : உத்தாலவனம், திருத்துருத்தி |
மூர்த்திகள்:
இறைவன் : உக்தவேதீசுவரர்
இறைவி : அரும்பன்னவனமுலையாள்
இறைவி : அரும்பன்னவனமுலையாள்
தீர்த்தங்கள் :பதும, சுந்தர, காவிரி
தலப்பெருமை:உமையம்மையார் சிவபெருமானை வழிபட்டுத் திருமணம் செய்து கொண்ட தலம் அக்கினி தன்பழி தீர வழிபட்டதலம் .விக்கிரமசோழன் மனைவி கோமளைக்கு குட்டநோய் தீர்த்த தலம்.வருணனின் சலோதரம் நீங்கிய தலம் காளி,சூரியன்,காமன்,காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்ட தல சிவபக்தனின் காசநோய்ப் போக்கியதுமாகிய பல பெருமைகளை உடையது இத்தலம்.
கதிரவன் வழிபட்டு அருள்பெற்ற கார்த்திகை ஞாயிறு வழிபடுவோர் இன்றும் பல்வகை நன்மைகளையும் பெற்று வருகின்ற தலம்.
தேவார பாடல்:
பொருத்திய குரம்பைதன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சுறைவனை யேத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம்வைத்துங் கொருத்தியைச் சையுள்வைத்த
துருத்தியஞ் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே

தேவாரப் பதிப்பகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 37 வது, திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்புகழ் பெற்ற தலம். மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டோர் நம்பிகள், சேக்கிழார் ஆகியோர் இத்தலத்தை குறித்துப் பாடியுள்ளார்.
Ara Time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக