http://balukathaiyan.blogspot.com/திருவாவடுதுறை-கோமுக்தீஸ்வரர்
தலவிருட்சம்:அரசமரம் | தலமும் இருப்பிடமும்: கும்பகோணத்திலிருந்து 20 கிலோ மீட்டரில் தொலைவில் உள்ளது. |
தலப்பெயர்கள்:
கோகழி, துறைசை, நந்தி சேத்திரம், அரசவனம். மகாதாண்டவபுரம், கோமுக்கிதலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், நவகோடி சித்தபுரம்
கோகழி, துறைசை, நந்தி சேத்திரம், அரசவனம். மகாதாண்டவபுரம், கோமுக்கிதலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், நவகோடி சித்தபுரம்
மூர்த்திகள்:
இறைவன்:கோமுக்தீஸ்வரர்
இறைவி:ஒப்பிலாமுலையம்மை
இறைவி:ஒப்பிலாமுலையம்மை
தீர்த்தங்கள் :கோமுக்கி தீர்த்தம்
தலப்பெருமை:பசுவடியாக இருந்த உமாதேவியார் இத்தல இறைவனை வழிபட்டுப் பசுரூபம் நீங்க இறைவனை உமையை அணைத்தெழுந்து காட்சியளித்த தலம்.
தேவர்களும் முனிவர்களும் வேண்டியதற்கிணங்க இறைவன் இத்தல அம்பலத்தில் தாண்டவம் புரிந்த தலம்.
புத்திரபாக்கியமளித்து முசுகுந்த சக்கரவர்த்திக்குத் தியாகேசராகக் காட்சி கொடுத்தும். சுந்தர நடனம் நிகழ்த்தியும் அருள் செய்த தலம்.
முனிவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தருளியதும், போகர் முதலிய நவகோடி சித்தர்களும் அட்டமா சித்திகளை அருளிய தலம்.
தேவார பாடல்:
இடரினுந் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழு வேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

திருமூலர் இத்தலத்தில் ஆண்டுகளுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகள் யோகம் இருந்து 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திர நூலை அருளிச் செய்த தலம்.


Ara Time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக